மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணையும் கன்னி மடம் படக்குழுவினர்.
நடிகர் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில், கதாநாயகனாக ஸ்ரீராம் கார்த்தி – கதாநாயகியாக சாயாதேவி ஜோடியாக நடித்து பிப்ரவரி 21 அன்று வெளியான கன்னிமாடம், திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த கன்னி மாடம் திரைப்படத்தின் ஒளிப்பதிவு, மிக சிறப்பாக பேசப்பட்டது. இது குறித்து, ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹாரீஸ் கூறுகையில், ”ஒரு காட்சியில், கதாநாயகியின் இறந்தவுடன் ரத்தத்தில், கதாநாயகியின் முகம் தெரியும்படியாக எடுக்க மிகவும் சிரமப்பட்டோம். ஒளிப்பதிவையும் உணர்ந்து, ரசிகர்கள் பாராட்டுவது, மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
இதே படக்குழு அடுத்ததாக, மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைகிறது. அதற்கான அறிவிப்பு, மிக மிக விரைவில் வெளியாகும்,” என்றார். இயக்குனர் போஸ் வெங்கட்.
நடிகர் இயக்குனர் போஸ் வெங்கட் நடிகராகவும் வெற்றி பெற்றார் கன்னி மாடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் வெற்றி பெற்றார்
இந்த கன்னி மாடம் திரைப்படத்தை வெற்றிப்படமாக அமைத்துக்கொடுத்த அனைத்து ரசிகப் பெருமக்களுக்கு நன்றி