Sunday, October 25
Shadow

மீண்டும் ஒரு மரியாதை திரை விமர்சனம். ரேட்டிங் – 2./5

 

நடிப்பு – பாரதிராஜா, ராசி நட்சத்திரா, மௌனிகா, ஜோ முல்லூரி, கவிதா பாரதி, மற்றும் பலர்

தயாரிப்பு – மனோஜ் கிரியேஷன்ஸ்

இயக்கம் – பாரதிராஜா

ஒளிப்பதிவு – சாலை சகாதேவன்

எடிட்டிங் – கே.எம்.கே.பழனிவேல்

இசை – என்.ஆர்.ரகுநந்தன்

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

திரைப்படம் வெளியான தேதி – 21 பிப்ரவரி 2020

ரேட்டிங் – 2./5

 

தமிழ் திரைப்பட உலகில் மறக்க முடியாத சில படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா இந்த மீண்டும் ஒரு மரியாதை படம் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே அவர் இயக்கிய படமா என அதிர்ச்சிதான் இருக்கிறது.

கிராமத்து திரைப்படங்களையே அதிகம் இயக்கிய இயக்குனர் இமயம் பாரதிராஜா, வெளிநாட்டு மண்ணைக் கதைக் களமாகக் கொண்டு இயக்கியுள்ள திரைப்படம்தான் இது. படம் முழுவதும் இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் இருவரும் மாறி மாறிப் பேசியே நேரத்தையும் கொல்கிறார்கள்.

வாழ்ந்து முடித்த வயதான ஒருவருக்கும், வாழ ஆரம்பிக்கும் ஒரு இளம் பெண்ணிற்கும் இடையேயான நட்பு, அவர்களின் பயணம்தான் இந்த மீண்டும் ஒரு மரியாதை
திரைப்படம்.

லண்டனில் வசிக்கும் தனது மகனால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அங்கு உடனிருந்து மறைந்த ஒருவரின் கடைசி கால ஆசையை நிறைவேற்ற ஒரு பயணத்தை ஆரம்பிக்கிறார்.

அப்போது தன் அக்கா கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயலும் கதாநாயகி ராசி நட்சத்திராவைக் காப்பாற்றுகிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

பத்து நாள் தன்னுடன் பயணிக்கும் படியும், அதற்குள் இந்த வாழ்க்கை போரடித்தால் தானே, கதாநாயகி ராசி நட்சத்திராவைக் கொல்வதாகச் சொல்கிறார் பாரதிராஜா.

அதற்குச் சம்மதித்து அவருடன் பயணத்தில் கதாநாயகி ராசி நட்சத்திராவும் உடன் செல்கிறார்.

பயணத்தில் வாழ்க்கையின் அர்த்தத்தை கதாநாயகி ராசி நட்சத்திராவுக்குப் புரிய வைக்கிறார்.

இதனிடைய கதாநாயகி ராசி நட்சத்திராவை கடத்தியதாக இயக்குனர் இமயம்பாரதிராஜா, அவரது அக்கா கணவர் போலீசிடம் புகார் அளிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதி கதை

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் வயதான காலத்தில் கதாநாயகனாக நடித்தது போல பாரதிராஜாவுக்கும் இந்த வயதில் கதாநாயகனாக நடிக்கும் ஆசை வந்துள்ளது. அதில் தவறேதும் இல்லை. வயதான காலத்திலும் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் சில ஹீரோக்கள் இங்கு இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆனால், இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒவ்வொரு வார்த்தையையும் முழுங்கிப் பேசி வசனம் பேசி முடிப்பதற்குள் கொட்டாவி வந்துவிடுகிறது. ஒரு இளம் பெண்ணுக்கு வாழ்க்கையின் சுவாரசியத்தை, அர்த்தத்தை புரிய வைக்கும் ஒரு கதாபாத்திரம். அழுத்தமான வசனங்களை எழுத எவ்வளவோ காட்சிகள். ஆனால், ஒரு சில இடங்களில் மட்டும் தான் அது இருக்கிறது.

Read Also  களவாணி 2 - திரை விமர்சனம்

இந்த திரைப்படத்தை தன் துறுதுறு நடிப்பால் ஓரளவுக்கேனும் தாங்கிப் பிடிப்பவர் கதாநாயகி ராசி நட்சத்திரா தான். அவருடைய கதாபாத்திரத்தில் அப்படியே ஐக்கியமாகி விடுகிறார்.

முதல் திரைப்படம் என்று சொன்னால் நம்ப முடியாத அளவிற்கு அவருடைய நடிப்பு இருக்கிறது.

இவர்கள் இருவரைத் தவிர இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மனைவியாக மௌனிகா சில காட்சிகளில் வந்து பின்னர் மௌனமாகிவிடுகிறார். நட்சத்திராவின் அக்கா, அக்கா கணவர் ஆகியோர் ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.

இந்த திரைப்படத்தில் லண்டனையும், அதன் சுற்றுப்புறங்களையும் அழகாக சுற்றிக் காண்பிக்கிறார் ஒளிப்பதிவாளர் சாலை சகாதேவன். படத் தொகுப்பாளர் பல இடங்களில் பிரீஸ் செய்வது ஏன் எனத் தெரியவில்லை. சில காட்சிகளில் திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் ஒரு டெலிபிலிம் பார்ப்பது போலத் தோன்றுகிறது. ரகுநந்தன் இசையில் எதுவும் சொல்லிக் கொள்வது போல இல்லை.

கிரியேட்டிவிட்டி துறையில் இருப்பவர்கள் தங்கள் புகழ் நிலைத்திருக்கும் காலத்திலேயே ஓய்வு பெறுவதுதான் அவர்கள் தங்கள் கிரியேட்டிவிட்டிக்குக்
ஒரு மரியாதை.

காலத்தால் அழியாத ஒரு முதல் மரியாதை இருக்கும் போது எதற்காக மீண்டும் ஒரு மரியாதை என்பது தெரியவில்லை