மீண்டும் காதல்: ஹன்சிகா-சிம்புவுக்கு வாழ்த்து

கடந்த 2015ல் வெளியான படம் வாலு. இதில் நடிகர் சிம்புவும், நடிகை ஹன்சிகாவும் இணைந்து நடித்திருந்தனர். அப்போது, இருவரும் படத்துக்காக நெருக்கமான காட்சிகளில் நடிக்க, இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் துவங்கினர். இருவரும் ஓட்டல்கள், மால்கள் என கொஞ்ச காலம் சுற்றித் திரிந்தனர்.
இப்படி சென்ற இருவரது உறவில் திடீர் சிக்கல். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்தனர். இருந்தபோதும், இருவரும் தொடர்ந்து அவரவரது பாதையில் சென்று, படங்களில் பரபரப்பாக நடித்து வந்தனர். 
பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகாவின் பட வாய்ப்புகள் திடுமென பறிபோயின. அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து அவர் வீட்டிலேயே முடங்கினார். இந்த சமயத்தில் தனது குண்டு உடம்பைக் குறைத்து, அவர் மீண்டும் பட வாய்ப்புகளைத் தேட, அறிமுக இயக்குநர் ஜலீல் அவரை, மஹா என்ற படத்தில் நடிக்க வைத்தார்.
அந்தப் படத்துக்கான, போஸ்டர்கள் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஜலீலும், ஹன்சிகாவும் விளக்கம் அளித்தனர். இருந்தபோதும், விடாத சிலர், இயக்குநர் ஜலீல் மீது போலீசிலும் புகார் கொடுத்தனர்.
இதற்கிடையில், படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க, படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க வந்தார் நடிகர் சிம்பு. ஹன்சிகாவுடன் இணைந்து நடிக்கத் துவங்கினார். இருவரும், பழைய கசப்புகளை மறந்து மீண்டும் சகஜமாக பேசிப் பழகி நடித்து வருகின்றனர். 
இந்நிலையில், இருவரும் படத்துக்காக ஜீப்பில் சுற்றி வருகின்றனர். படபிடிப்பு தளத்துக்கு வந்த ரசிகர்கள் இதை வீடியோ பதிவாக்கி எடுத்துச் சென்று, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விட்டனர். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வர, சிம்புவும்-ஹன்சிகாவும் மீண்டும் காதலிப்பதாக செய்திகள் பரவி, சமூக வலைதளங்களில் இருவருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்