மீண்டும் நடிப்பு துறையில் கவனம் செலுத்தவுள்ளார் ஸ்ருதிஹாசன்

லண்டன் காதலன் மைக்கேல் கோர்சேலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகும் நோக்கத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளார் என்று கூறப்பட்டது ஆனால் தற்போது இதனை மறுத்த அவர், “திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போது நினைக்கிறேனோ அப்போது திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர்”மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணமிருப்பதால் புதுப்படங்களை ஒப்புக்கொள்ள விருக்கிறேன். விரைவில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளேன். எனது தந்தை கமல்ஹாசன் கட்சியில் சேர்வீர்களா⁉என்கிறார்கள். அரசியலில் எனக்கு இப்போதைக்கு ஆர்வம் இல்லை. ஆனால் எனது தந்தை மக்கள் வாழ்வு வளம் பெறுவதற்காக தனது கடினமான உழைப்பை தொடர்ந்து தருவார்” என்றும் தெரிவித்துள்ளார்