மீண்டும் மீண்டும் பேயுடன் போராடும் அனுஷ்கா
அனுஷ்கா
அருந்ததி தொடங்கி பாகமதி வரை பல ஹாரர் படங்களில் நடித்தவர் அனுஷ்கா. தற்போது சைலன்ஸ், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், இந்த படங்களைத் தொடர்ந்து ஸ்பானிஷ் மொழியில் வெளியான ஜூலியாஸ் ஐ என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படமும் ஹாரர் கதையில் தான் உருவாகிறது. அந்த வகையில் இந்தப்படம் முழுக்க பேய் உடன் போராடும் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் அனுஷ்கா. தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை கபீர்லால் என்பவர் இயக்க இருக்கிறாராம்.