முதன்முறையாக காவல்துறை அதிகாரி வேடத்தில் களமிறங்கும் ஷ்ரத்தா கபூர்

பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர், பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படத்தின் மூலம் முதன்முறையாக தென்னிந்திய சினிமாவுக்கு வந்துள்ளார். மேலும் இந்த படம் இவருக்கு மிகுந்த சிறப்பான படமாக அமைந்துள்ளது. அதாவது இந்த படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில் இது குறித்து நடிகை ஷ்ரத்தா கபூர் கூறுகையில் “நான் நீண்டநாட்களாக நடிக்க வேண்டும் என்று ஆசைப் பட்ட காவல்துறை அதிகாரி வேடம் இந்த படத்தில் கிடைத்திருக்கிறது. அதோடு படப்பிடிப்பு தளத்தில் எந்நேரமும் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு விசாரணை செய்தபடி ஒத்திகை பார்த்து இந்த படத்தில் நடித்துள்ளேன். அதனால் இந்த படத்தில் எனது சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்