முதல்முறையாக த்ரிஷா படத்திற்கு இசையமைக்கும் பிரபலம்.

நடிகை த்ரிஷா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இந்த படத்தை, ‘எங்கேயும் எப்போதும்‘, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய படங்களை இயக்கிய எம்.சரவணன் இயக்கவுள்ளார். ‘ராங்கி’ எனப் தலைப்பிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. இந்நிலையில், ஆக்‌‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் நடிகை சிம்ரனுடன் இணைந்து மற்றொரு த்ரில்லர் படத்தில் நடிகை த்ரிஷா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.