*முதல்வர் மம்தாவுடன் கூட்டணி அமைத்த கமல்ஹாசன் *

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அந்தமானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியை கமல் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது அந்தமான் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் அங்குத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி இந்திய குடியரசு கட்சியுடனும் கூட்டணி அமைத்துள்ளது.