முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 275/9

இலங்கை அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி 20 போட்டியில் விளையாட உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தனுஷ்கா குணதிலகா, திமுத் கருணரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.கருணரத்னே சிறப்பாக ஆடி அரை சதமடித்த அவர் 79 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஆடிய ஏஞ்சலோ மேத்யூஸ் 83 ரன்னிலும் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

இறுதியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 87 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. நிரோஷன் டிக்வெலா 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், நீல் வாக்னர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.