முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆசை – அழகி அக்சரா ரெட்டி
கேரளாவில் கடந்த வாரம் ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா 2019’ பட்டத்திற்கான அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த ஜோடியாக ரெட்டி 22 மாநிலங்களை சேர்ந்த 240 பேர் கலந்துகொண்டனர். இதில் தமிழகம் சார்பில் சென்னையை சேர்ந்த அக்சரா ரெட்டி ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா 2019’ பட்டத்தை வென்றார். இதனையடுத்து வரும் அக்டோபர் மாதம் துபாயில் நடைபெறும் ‘மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019’ பட்டத்திற்கான போட்டியில் அக்சரா ரெட்டி இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “தமிழ் படங்களில் நடிக்க நான் தயாராக உள்ளேன். ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.