முன்னாள் எம்பியும் நடிகர் ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்

நடிகரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஜே.கே.ரித்திஷ் இன்று மாரடைப்பால் காலமானார். ராமநாதபுரத்தில் உள்ள இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இன்று மரணம் அடைந்தார். இவருக்கு வயது 46. இவர் நடிகர், அரசியல்வாதி மட்டுமில்லாது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளிவந்த ‘எல்.கே.ஜி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.