முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்தநாளில் ‘குயின்’ டிரைலரை வெளியிடும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்
முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 3 இயக்குனர்கள் திரைப்படமாக்கி வருகின்றனர்.
ஆனால் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், பிரசாந்த் முருகேசனுடன் இணைந்து ‘குயின்’ என்ற பெயரில் ஒரு வெப்சீரிஸ் ஆக இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் ‘குயின்’ டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த டீசரில் ஜெயலலிதாவாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணனின் முகம் காட்டப்படவில்லை.
வருகிற டிசம்பர் 5ஆம் தேதி டிரைலரை இணையத்தில் வெளியிட உள்ளனர். இதில் இன்னும் பல சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கும் என நம்பலாம்.
டிசம்பர் 5ஆம் தேதி தான் ஜெயலலிதா இறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.