முன்று வருட இடைவெளிக்கு பிறகு மலையாள சினிமாவிற்கு சென்ற நடிகை

‘ப்ரேமம்’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இந்த படத்தை தொடர்ந்து துல்கர் சல்மானுடன் ‘கலி’ என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு நடிகை சாய் பல்லவி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், தற்போது முன்று வருடங்களுக்கு பிறகு, நடிகை நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் ‘அதிரன்’ என்ற மலையாள படத்தில் நாயகியாக இவர் நடிக்கவுள்ளார். இதனையடுத்து தனது கெட்டப்பை கேரள புடவையில் வெளியுட்டுள்ளார்.