மும்பையில் புதிய பங்களா வாங்கினார் நடிகை டாப்சி

தமிழில் ஆடுகளம் திரைப்படத்தில் நடித்தவர் டாப்சி பன்னு. இவர், இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதன் பின், அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு இல்லை. இதையடுத்து, அவர் பாலிவுட் பக்கம் தன்னுடைய கவனத்தைத் திருப்பினார். 
இதற்காக மும்பைச் சென்றவருக்கு, வாய்ப்புகள் வரத் துவங்கின. பேபி, பிங்க் உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்தப் படங்களில் நடித்தார். படங்கள் ரிலீசாகி பெரு வெற்றியைப் பெற்றது. இதையடுத்து, தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.
ஷாந்த் கி ஆந்த், தட்கா, மிஷன், மங்கள் உள்ளிட்ட பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.இதையடுத்து, அவர் மும்பையின் புற நகர் பகுதியில் பல அறைகள் கொண்ட தனி பங்களா ஒன்றை வாங்கி இருக்கிறார். இதற்காக, பல கோடிகளை செலவழித்திருக்கிறார். இந்த வீட்டின் அலங்கார வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வீட்டுக்கான அலங்கார விளக்குகள் மற்றும் அலங்காரப் பொருட்களை டாப்சியின் சகோதரி ஷாகன், ஸ்பெயினில் இருந்து வரவழைத்திருக்கிறார்.
அதோடு, பங்களாவின் வீட்டு அலங்கார வேலைகளை டாப்சியின் சகோதரி ஷாகனே முன்னின்று செய்து வருகிறார். முன்னதாக, கடந்த வருடம் அதே மும்பை புற நகர் பகுதியில், மூன்று அறை கொண்ட வீடு ஒன்றை டாப்சி வாங்கி இருந்தார்.