Monday, January 18
Shadow

மூக்குத்தி அம்மன் திரை விமர்சனம். ரேட்டிங் – 2.75/5

நடிப்பு – ஆர்.ஜே பாலாஜி, நயன்தாரா, அஜய் கோஷ். ஊர்வசி, மௌளி மற்றும் பலர்

தயாரிப்பு – வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

இயக்கம் – ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன்

ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன் பி

எடிட்டிங் – செல்வா ஆர்.கே

இசை – கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா

வெளியான தேதி – 14 நவம்பர் 2020

ரேட்டிங் – 2.75/5

தமிழ் திரைப்பட உலகில் பக்திப் திரைப்படங்கள் வந்து நீண்ட காலமாகிவிட்டது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன்’ என டைட்டில் வெளியானதிலிருந்து 80, 90-களில் வெளியான அம்மன் திரைப்படங்களைப் போல் இருக்குமா?

ஆர்.ஜே.பாலாஜியின் நையாண்டி கலந்த காமெடி படமாக இருக்குமா? என்கிற விவாதங்கள்தான் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் போய்க்கொண்டிருந்தன.

ப்ரோமோ வெளியானதிலிருந்து நவீனக் காலத்துக்கு ஏற்ற ஏராளமான VFX-உடன் இந்தக் காலத்துக் கடவுள் நம்பிக்கையும் அதனைப் பயன்படுத்திக்கொள்ளும் சாமியார்களும் கதைக்களம் போல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் தோன்றியது.

அனைவரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா ஓடிடி தளத்தில் இந்த வருடத் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம்!

இந்தக் காலத்து பெண்கள் கூட பக்திப் படங்களைப் பார்த்து ரசிப்பார்களா என்பது சந்தேகம்தான்.

இருப்பினும், ஒரு பக்திப் படத்தை நகைச்சுவை கலந்து கொடுத்தால் இந்தக் காலத்திய அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள் என ஆர்.ஜே பாலாஜி நினைத்திருக்கலாம்.

ஆனால், அதற்காக அவர் அதிகம் மெனக்கெடவில்லை.

கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட யு டியுப் நகைச்சுவை நிகழ்ச்சி போன்றுதான் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்திடும் போன்ற அச்சுறுத்தல்களோ தான் வைத்திருக்கும் கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆபத்திலிருந்து கதாநாயகியை காப்பாற்றி இளைப்பாறும் தேய்ந்து போன கதைக்களமோ இந்த பக்தி திரைப்படத்தில் இல்லை.

மக்கள் தங்களின் மனக்குறைகளை வெளியேற்றும் கோவில்களைச் சிலர் தங்களின் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் யுத்திகளை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

இந்த திரைப்படம் எவ்வளவுதான் உருகி உருகிக் கும்பிட்டாலும், தெய்வத்தால் நேரடியாகக் களமிறங்கி எந்த உதவியும் செய்ய முடியாது என்பதையும் கடவுளின் பெயரால் ஏமாற்றும் சாமியார்களின் சதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்.

நாகர்கோவிலில் உள்ள ஒரு டிவி சேனலில் நிருபராகப் பணியாற்றுபவர் கதாநாயகன் ஆர்ஜே பாலாஜி அம்மா ஊர்வசி மூன்று தங்கைகள் ஒரு தாத்தா என அப்பா தனது சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி விட்டதால் குடும்பச் சுமை அவர் தலை மீது இருக்கிறது. பார்க்கும் பெண்கள் எல்லாம் தன்னை விட வயதில் மூத்தவராக இருக்கும் கதாநாயகன் ஆர்.ஜே. பாலாஜியின் குடும்ப சூழலைப் பார்த்து பிடிக்கவில்லை என்கிறார்கள்.

Read Also  ஹவுஸ் ஓனர் - திரை விமர்சனம்

தனது குடும்பத்து குலதெய்வமான மூக்குத்தி அம்மனை சென்று வழிபட்டால் விடிவு பிறக்கும் என்கிறார்கள்.

குடும்பமே குல தெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபடுகிறது-

கதாநாயகன் ஆர்.ஜே பாலாஜியின் வேண்டுதலுக்கு மனமிரங்கி மூக்குத்தி அம்மனே நேரில் வருகிறார்.

அந்தப் பகுதியில் உள்ள 11,000 ஏக்கர் நிலத்தை சாமியார் அஜய் கோஷ் தனதாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார்.

தொலைதூர கிராமத்தில் நிருபராக பணிபுரியும் ஆர்.ஜே பாலாஜி, சாமியார் வேடத்தில் மக்களின் நம்பிக்கையையும், பணத்தையும் சுரண்டும் பகவதி பாபாவின் (அஜய் கோஷ்) திருவிளையாடலை தன் தாய், தாத்தா மற்றும் மூன்று சகோதரிகளுடன் வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சியில் இறங்குகிறார்.

தங்கள் பகுதி நிலத்தைக் காக்க அம்மன் கதாநாயகி நயன்தாராவும் கதாநாயகன் ஆர்.ஜே. பாலாஜியும் என்ன செய்கிறார்கள் இந்த முயற்சியில் பாலாஜி வெற்றிபெறுகிறாரா இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.

கதாநாயகன் பெயர் ஏங்கெல்ஸ் ராமசாமி ஆர்.ஜே.பாலாஜி அதாவது உலகின் இரண்டு முன்னணி பகுத்தறிவு சிந்தனையாளர்களான பிரீட்ரிக் ஏங்கெல்ஸ் மற்றும் ஈ.வெ.ராமசாமி ஆகியோரின் பெயர்களை இணைத்துச் சூட்டப்பட்டிருக்கும்.

ஆனால், நம் ஊரில்தான் பெரும்பாலானவர்களின் பெயருக்கும் ஆளுக்கும் சம்பந்தமே இருக்காதே. அதேபோலத்தான் நம்முடைய கதாநாயகனும். சிறுவயது முதல் கடவுள் நம்பிக்கை அதிகம் நிறைந்திருக்கும் நபர் கடவுளையே நம்பிக்கொண்டிருக்கும் கதாநாயகன் ஆர் ஜே பாலாஜி அவர்மீது நம்பிக்கையிழந்து காணப்படுகிறார்.

இந்நிலையில், ஓர் சந்தர்ப்பத்தில் கதாநாயகன் ஆர் ஜே .பாலாஜி முன் தோன்றும் மூக்குத்தி அம்மன் கதாநாயகி நயன்தாரா தன்னுடைய பாழடைந்த கோவிலைத் திருப்பதி கோவில் போலப் பிரபலமாக்குமாறு கேட்டுக்கொள்வதைப் போலக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்கள் ஆர்.ஜே பாலாஜி மற்றும் சரவணன்.

கடவுளின் நிலைப்பாட்டை யார் உயர்த்துகிறார்கள் என்பதற்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

இதற்கு முன்பே ஆர்.ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்த ‘எல்.கே.ஜி’ திரைப்படம் ஒரு அரசியலை கலந்து கிண்டல் படமாக அமைந்து ஆரம்பம் முதல் கடைசி வரை நகைச்சுவையுடனும் விறுவிறுப்புடனும் இருந்து ரசிக்க வைத்தது.

ஆனால், இந்த திரைப்படத்தில் அவை இரண்டுமே ஆங்காங்கேதான் இடம் பெற்றுள்ளன,

அதுவே திரைப்படத்தின் பெரிய குறையாகவும் அமைந்துவிட்டது.

திரைப்படத்தின் கதையை பெரிதாக யோசிக்கவில்லை. இடைவேளை வரை இருக்கும் கொஞ்சம் சுவாரசியம் இடைவேளைக்குப் பின் காணாமல் போய்விடுகிறது-

டிவி பேட்டி அது இது என பல படங்களில் பார்த்ததை வைத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி மற்றும் சரவணன்.

கதாநாயகன் ஆர்.ஜே . பாலாஜி தனக்குப் பொருத்தமாக இருக்கும் அப்பாவி ஆண்மகன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

பேச்சிலும், கிண்டலிலும் குறைவில்லை, ஆனால் அதில் காமெடிக்குத்தான் பஞ்சம் இருக்கிறது.

Read Also  ஆதித்ய வர்மா திரை விமர்சனம்

போலி சாமியார் என்றால் வழக்கம் போல இந்து சாமியார்களை மட்டும்தான் சினிமாவில் கிண்டலடிக்கிறார்கள். இந்தப் படத்தில் தமிழ்நாட்டின் இரு பிரபலமான சாமியார்களை கிண்டலடித்துள்ளது போல் தெரிகிறது.

மூக்குத்தி அம்மனாக கதாநாயகி நயன்தாரா. தான் ஏற்று நடிக்கும் எந்தக் கேரக்டராக இருந்தாலும் அதில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் வித்தை அறிந்தவர்

கதாநாயகி நயன்தாரா. இந்தப் படத்திலும் அப்படியே அம்மனாக அவரை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

கண்களிலும், முகத்திலும் ஒரு ஜொலிப்பு தெரிகிறது. திரைப்படம் முழுவதும் அவர் வரவில்லை கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றம் போலத்தான் வந்து போகிறார்.

போலி சாமியாராக அஜய் கோஷ். இங்குள்ள சாமியார்களின் வீடியோக்களை அவரிடம் கொடுத்திருப்பார்கள் போலும், அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

நடிகர் ‘சூரரைப் போற்று’ நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படத்தில் ஊர்வசியின் சிறந்த நடிப்பைப் பார்த்தோம்.

அதன் பிறகு மற்றுமொரு சிறப்பான கதாபாத்திரம், எற்று இந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலும் அருமையான நடிப்பை
கொடுத்து இருக்கிறார்.

கதாநாயகன் ஆர் ஜே. பாலாஜியின் தாத்தாவாக இயக்குநர் நடிகர் மௌலி அதிகம் பயன்படுத்தவில்லை.

கதாநாயகன் ஆர்ஜே.பாலாஜியின் தங்கைகளாக நடித்திருப்பவர்களும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் எல்ஆர் ஈஸ்வரி பாடும் அம்மன் பாடல் மட்டுமே ரசிக்க வைத்துள்ளது.

பின்னணி இசையில் சுமாராக உள்ளது.

நாகர்கோவிலில் உள்ள இயற்கை அழகை கண்முன் மிகவும் அழகாக படம் பிடித்து இருக்கிறார். ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.

கதாநாயகி நயன்தாராவை அழகாக படமாக்க ஸ்பெஷல் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது போல.

இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் ‘கவனம் செலுத்த வேண்டும்கவனம் செலுத்த வேண்டும்.

லாஜிக் மற்றும் தொடர்ச்சியான கதைக்களம் இல்லை என்றாலும், மூக்குத்தி அம்மன் சலிப்பைக் கொடுக்காத ஒருவித பக்தி திரைப் படம்.

மூக்குத்தி அம்மன் – லாஜிக் இல்லா மேஜிக்.

CLOSE
CLOSE