மெஹந்தி சர்க்கஸ் – திரை விமர்சனம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு ஊரில், ஒரு நடுத்தர வயது பெண் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கட்டிலில் கிடக்கிறார். அந்த பெண்ணின் கணவரை அழைத்து வர, அவரது மகள் மற்றும் உறவினர் ஒருவருடன் புறப்படுகிறார்
 
மகாராஷ்டிராவில் இருந்து அப்படியே கொடைக்கானல் பூம்பாறைக்கு பயணிக்கிறது கதை. பிளாஷ் பேக் காட்சிகள் விரிகின்றன. 
 
1990களில் பயணிக்கும் கதையில் கொடைக்கானல் 
உள்ள பூம்பாறையில் என்ற கிராமத்தில் இசையால் உலகை ஆட்டிப்படைத்த இளையராஜாவின் காலம் அது. அவரின் இசையால் அடிமையாக்கப்பட்ட நமது ஹீரோ ‘ஜீவா’ ராஜகீதம் என்ற பெயரில் 
கேசட் கடை ஒன்றை கொடைக்கானலில் உள்ள பூம்பாறையில் நடத்தி வருகிறார்.கதாநாயகன் 
ஜீவா (மாதம்பட்டி ரங்கராஜ்), 
 
ஊர் ஊராக சென்று தனது தந்தையுடன் சேர்ந்து சர்க்கஸ் செய்து பிழைப்பு நடத்தி வருபவர் தான் வட நாட்டைச் சேர்ந்த நாயகி மெஹந்தி. இப்படியாக ஒரு முறை கொடைக்கானலில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தி ‘மெஹந்தி சர்க்கஸ்’ குழு அங்கு வருகிறது.
 
அந்த ஊரில் சர்க்கஸ் கூடாரம் அமைத்திருக்கும் சன்னி சார்லஸின் மகள் மெஹந்தியை (ஸ்வேதா திரிபாதி) காதலிக்கிறார். மெஹந்திக்கும் ஜீவா மீது காதல் மலர்கிறது.
 
கீழ் ஜாதியினரை வீட்டில் கூட அனுமதிக்க மறுப்பவர் தான் ‘ஜீவா’வின் தந்தை
ராஜாங்கம் ( மாரிமுத்து ) இந்த ஜாதி வெறி கொண்ட தந்தையை மீறி ஜீவா-மெஹந்தியின் காதல்
சாதி வெறிப்பிடித்த ஜீவாவின் தந்தை ராஜாங்கம் (மாரிமுத்து), காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதேபோல் மெஹந்தியின் தந்தையும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஹீரோயினின் உறவுக்கார பையன் ஜாதவின் (அஞ்சுர் விகாஷ்) உதவியுடன் காதல் தொடர்கிறது.
 
ஒருகட்டத்தில் எதிர்ப்பு அதிகமாகவே, மெஹந்தியின் தந்தையிடமே நேரடியாக சென்று பெண் கேட்கிறார் ஜீவா. மரண விளையாட்டான கத்தி வீச்சில் வெற்றி பெற்றால் பெண் தருவதாக சம்மதிக்கிறார் சன்னி சார்லஸ். கத்தி வீச்சில் ஜெயித்து மெஹந்தியின் கரம் பிடித்தாரா ஜீவா?, மகாராஷ்டிராவில் இருந்து வந்த பெண் யார் என்பது தான் மீதிக்கதை.
 
ஜீவாவாக நடித்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், நடிக்கவில்லை கதாபாத்திரத்திற்கு எற்றவாறு வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். கதைக்கென அவரின் மெனக்கெடல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
 
ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், நடிகர் ரகுமானின் சிறுவயது சாயலில் தோற்றமளிக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். இது முதல் படம் போல் இல்லை , ரங்கராஜின் நடிப்பு பல படங்களில் நடித்த அனுபவம் போல் உள்ளது
 
இளையராஜாவின் இசையில் இவரது காதல் பயணம் நம்மையும் 90க்கே அழைத்துச் செல்கிறது. காதலுக்காக தந்தையிடம் அடி வாங்கும் காட்சிகள் நம்மை கண்கலங்க வைக்கிறது. கோலிவுட்டில் நிச்சயம் இவர் ஒரு ரவுண்ட் அடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
 
காதலை வாழ வைத்த, வாழ வைத்துக் கொண்டிருக்கும், வாழ வைக்கப் போகும் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு காதல் படம். எத்தனை படங்கள் வந்தாலும், காதல் மட்டும் அலுக்காது என்பதை நன்கு உணர்ந்து படத்திற்கு கதை – வசனம் எழுதியிருக்கிறார் இயக்குனர் ராஜூ முருகன். குறிப்பாக ஷார்ப்பான வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.
 
மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ’ என படம் முழுவதையும் காதல் கவிதையாக படைத்திருக்கிறார் இயக்குனர் சரவணன் ராஜேந்திரன். கொடைக்கானல் மலைகளும், பூம்பாறையின் இயற்கை அழகும் படத்துடன் சேர்ந்து காதல் டூயட் பாடுகின்றன.
 
ரம்மியமான காட்சியமைப்பு, கண்களை உறுத்தாத ரொமான்ஸ், பின்னணியில் இசையராஜா பாடல்கள், எதிர்ப்பு, சவால், போட்டி, பிரிவு, வலி, மது, தேவதாஸ் நாய், கூடுதலாக சர்க்கஸ் வித்தைகள் என ஒரு காதல் படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கிறது. கண்டதும் காதல் கதை தான் என்றாலும், அதை முடிந்த அளவுக்கு சுவாரஸ்யமாக தர முயன்றிருக்கிறார் இயக்குனர்.
 
 
வட இந்திய  பெண்ணாகவே படம் முழுவதும் வருவதால், அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் 
ஸ்வேதா திரிபாதி.  ஒவ்வொரு காட்சியிலும் நன்றாக நடித்துள்ளார்.
 
ஆர் ஜே விக்னேஷ் காமெடி என்ற பெயரில் பல இடங்களில் 
கடுப்பேற்றுகிறார்
சில வசனங்களில், அவரையும் மீறி ராஜூ முருகன் தான் வெளியே தெரிகிறார். 
கிருஸ்தவ மதப்போதகராக வித்யாசமான கதாபாத்திரத்தில்  நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்
வேல.ராமமூர்த்தி, அஞ்சுர் விகாஷ், மாரிமுத்து, பூஜா, சன்னி சார்லஸ் என அனைவருமே தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
 
ஷான் ரோல்டனின் பின்னணி இசையில் பாடல்கள் சூப்பர். ‘வெள்ளாட்டு கண்ணழகி’ பாடல் ரிப்பீட் மோட். ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் இளையராஜா பாடல் மனதிற்கு இதம்.
 
காதலை ரசித்து ரசித்து ஒவ்வொரு ஃபிரேமையும் செதுக்கி வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார். அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். 90களிலே நம்மை பயணிக்க வைத்து விட்டார். ராஜு முருகனின் வசனம் ஆங்காங்கே கைதட்ட வைக்கின்றன
 
ஏற்றம், இறக்கம் இல்லாமல், படத்தை ஒரே ஸ்பீடில் எடிட் செய்திருக்கிறார் பிலோமின் ராஜ்.
 
மெஹந்தி சர்க்கஸ். இடைவெளி காட்சியும், க்ளைமாக்ஸ் காட்சியும், யதார்த்தமாக நகரும் படத்தை, அப்படியே கமர்சியல் சினிமாவாக மாற்றிவிடுகின்றன. எளிதில் யூகிக்கக் கூடிய திரைக்கதையும் படத்தின் மிகப் பெரிய பலவீனம்.
 
’.சேவ் சில்ட்ரன் என்று காகிதத்தில் எழுதப்பட்ட வரிகளுக்கு மேலே அம்பேத்கர், பெரியார் புகைப்படங்கள் இருக்கும் காட்சிகளில் மனம் நெகிழ வைக்கிறார் இயக்குநர்.
சரவண ராஜேந்திரன் ஒரு இயக்குனராக வெற்றி பெற்று விட்டார்.
 
மெஹந்தி சர்க்கஸ் –  மொத்ததில் ஒரு சுகமான காதல் காவியம்