மே 17ம் தேதி வெளிவரும் படங்களில் இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா.

மே 17ம் தேதி மூன்று படங்கள் வெளியாக உள்ளன. சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’, எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘மான்ஸ்டர்’, கவின், ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ ஆகிய படங்கள் அன்றைய தினம் வருகின்றன.

இந்த படங்களுக்குள் ஓர் அதிசய ஒற்றுமை உள்ளது. இந்த மூன்று படங்களில் நடிப்பவர்களும் விஜய் டிவியிலிருந்து வந்தர்கள். ‘மிஸ்டர் லோக்கல்’ பட கதாநாயகன் சிவகார்த்திகேயன் அங்குதான் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு தொகுப்பாளராக உயர்ந்து இன்று முன்னணி ஹீரோவாக மாறியுள்ளார்.

‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்த கவின், ‘நட்புனா என்னானு தெரியுமா’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நாயகியாக அறிமுகமானவர்தான் பிரியா பவானி சங்கர். இவர் கதாநாயகியாக நடிக்கும் படம் ‘மான்ஸ்டர்’. இப்படி விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த மூவர் ஒரே நாளில் தங்கள் படங்கள் மூலம் போட்டி போடுகிறார்கள்.