யூட்டுப்பில் புதிய மைல்கல்லை எட்டியது மாரி 2 படத்தின் “ரவுடி பேபி” பாடல் !*

நடிகர் தனுஷ், நடிகை சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான திரைப்படம் ‘மாரி 2’. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரவுடி பேபி என்ற பாடலை நடிகர் தனுஷ் எழுதி பாடி இருந்தார்.

இந்தப் பாடல் வெளியானது முதல் இணையத்தில் வைரலாகி சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், தற்போது 700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ‘யூடியூப்’பில் “ரவுடி பேபி” பாடல் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தப் பாடல் 318 நாட்களில் இந்தச் சாதனையை படைத்துள்ளது.