யோகிபாபுவின் உழைப்பை கண்டு ஆச்சரியத்தில் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தில் நடிகர் யோகிபாபுவும் நடித்து வருகிறார். ஆனால் அதே நேரத்தில் ‘தர்பார்’ படத்திற்காக அவர் தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதால் அவர் நடித்து முடித்துள்ள ‘தர்மபிரபு’ மற்றும் ‘எ1’ ஆகிய படங்களின் டப்பிங் பணிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த 2 படங்களின் டப்பிங்கை மும்பையில் வைக்க சொன்ன யோகிபாபு, ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மும்பையில் உள்ள டப்பிங் ஸ்டுடியோவில் இந்த 2 படங்களின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். யோகிபாபுவின் கடுமையான உழைப்பை கண்ட ரஜினி, யோகி பாபுவை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும், அவர் நிச்சயம் சினிமாத்துறையில் பெரிய ஆளாக வருவார் என்றும் கூறியுள்ளார்.