யோகி பாபுவுக்காக மும்பை சென்ற நடிகர் சந்தானம்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. தற்போது ‘தர்பார்’ மற்றும் ‘பிகில்’ திரைப்படங்கள் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சந்தானம் khநடிப்பில் உருவாகிவரும் ‘ஏ 1’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதேசமயம் அவர் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தில் நடிப்பதற்காக மும்பையில் இருந்ததால் யோகிபாபுவின் காட்சிகளை மும்பைக்கே சென்று படமாக்கியுள்ளனர் ‘ஏ 1’ படக்குழுவினர்.