யோகி பாபு, நடிக்கும் தர்மபிரபு இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குநர் முத்துக்குமரன் திட்டம்

யோகி பாபு, நடிக்கும் தர்மபிரபு இரண்டாம் பாகத்தை உருவாக்க
இயக்குநர் முத்துக்குமரன் திட்டம்

விமல், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கன்னிராசி’. இந்த படத்தை இயக்குநர் முத்துக்குமரன் இயக்கியுள்ளார். ஆனால் இந்த படம் இன்னும் திரையுடவில்லை. தற்போது, இயக்குநர் முத்துக்குமரன் இயக்கத்தில் ‘தர்மபிரபு’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் யோகி பாபு, கருணாகரன், ராதாரவி, மனோபாலா, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் மே மாதம் 8ம் தேதி திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குநர் முத்துக்குமரன் திட்டமிட்டுள்ளார். இதற்கான கதையை இவர் தயாராக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.