ரங்கராஜ் பாண்டே கிட்ட மாட்டிக்காதேன்னு சிவகுமாரு சொன்னாரு… – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே நடத்தி வரும் சாணக்யா என்ற யூடிப் சேனலின் முதலாம் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் ரங்கராஜ் பாண்டேவின் நண்பர் என்ற முறையில் கலந்துக் கொண்டார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அவர் பேசியதாவது….

தினமலர் பத்திரிக்கையில் இருந்து பின்னர் தந்தி டிவிக்கு வந்தார் ரங்கராஜ் பாண்டே.

அவர் நடத்தும் கேள்விக்கென்ன பதில் மற்றும் நடுவராக இருக்கும் மக்கள் மன்றம் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பேன். அவரின் ரசிகனாக மாறிவிட்டேன்.

சினிமா படப்பிடிப்பு இருந்தால் கூட இவரின் நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே சீக்கிரம் வந்துவிடுவேன்.

அவர் முன் எப்படிப்பட்ட ஜாம்பவான்கள் இருந்தாலும் இவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது. விட்டால் போதும் என்றே அவர்கள் நினைப்பார்கள்.

ஒரு முறை என்னிடம் அண்ணே ஒரு பேட்டி கொடுங்க என்றார்.

நிச்சயம் முடியாது.. நான் மாட்ட மாட்டேன் என்றேன். சிவகுமார் கூட ரஜினி ரங்கராஜ் பாண்டே கிட்ட மாட்டிக்காத என்றார்.

ரங்கராஜ் பாண்டே தந்தி டிவியில் இருந்து வேலையை விட்டு வெளியேறும்போது ஏன் இப்படி செய்கிறார்? என நினைத்தேன்.

தந்தி டிவி நிர்வாகிகள் அவர்களின் ஊழியர்களை ஒரு பிள்ளையாக பார்த்துக் கொள்வார்கள்.

அங்கிருந்து வேறு சேனலுக்கு போக போகிறாரா? என்று கூட நினைத்தேன்.

அவரிடம் கேட்டதற்கு எல்லாரிடமும் பேட்டி கண்டு விட்டேன். இப்போது போரடிக்கிறது. அங்கு சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்றார்.

அடுத்து சாணக்யா என்ற யூடிப் சேனலை தொடங்கியுள்ளார். அதில் அவரின் சாணக்கியத்தனம் தெரியுது.

துக்ளக் இதழ் போன்று சாணக்யா நன்றாக வளர வேண்டும். சோ போன்று ரங்கராஜ் பாண்டேவும் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.