ரசிகர்களை கவர்ந்த புது வில்லன்! நடிகர் வினோத்சாகர்

ராட்சசன் படத்தில் மிரட்டும் ஆசிரியர் வேடத்தில் நடித்தவர் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டார்.

சமீபகால தமிழ் சினிமாவில் எதிர்பாராத வெற்றியை பெற்ற படம், `ராட்சசன். இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்தார். ராம்குமார் டைரக்டு செய்திருந்தார். அதில், இன்பராஜ் என்ற ஆசிரியர் வேடத்தில் வில்லனாக நடித்தவர், வினோத்சாகர். பார்வையால் மிரட்டும் ஆசிரியர் வேடத்தில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டார்.

அவருடைய திறமையான நடிப்புக்கு கிடைத்த பரிசாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி திரையுலகில் இருந்தும் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன!