ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்த சூர்யாவின்’காப்பான்!

சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் ’காப்பான்’. இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயீஷா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 20ம் தேதி வெளியான ‘காப்பான்’ படம் முதல் நாளில் 2.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன்மூலம் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை இந்தப் படம் படைத்துள்ளது. முன்னதாக ரஜினியின் ‘பேட்ட’ படம் முதல் நாளில் 2.1 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.