ரஜினிகாந்த் படத்தின் தலைப்பில் களமிறங்கும் பிரபலம்

இயக்குனர் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் ஈஷா ரெப்பா, நிகிஷா படேல். சாக்ஷி அகர்வால் என முன்று நாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் ஆடுகளம் நரேன், வையாபுரி, மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கு ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது 30 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திகில் படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது