ரஜினிக்கு வில்லனாக மாறிய பிரபல நடிகர் 

நடிகர் ரஜினிகாந்த், ‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 10ம் தேதி துவங்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.