ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் மேலுமொரு பாலிவுட் நடிகர்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படம் முற்றுலும் மும்பையில் நடப்பது போல படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி நடிக்கிறார் என முன்பே அறிவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி பல பாலிவுட் நடிகர்கள் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் நவாப் ஷா நெகடிவ் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவர் வில்லன் சுனில் ஷெட்டியின் நண்பராக படத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.