ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்குப்பதிவு

12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன் பின் அவர் “அனைவரும் தங்களது வாக்கினை தவறாமல் பதிவு செய்ய வேண்டும்” என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதேபோல் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரிலும், நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள பள்ளியிலும், நடிகர் கமல்ஹாசன் தனது மகள் சுருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியிலும் வாக்கு அளித்தனர்.