ரஜினி, விஜய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த இயக்குனர்

குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது. இந்நிலையில் ராஜு முருகன், சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ”யார் யாரோ சூப்பர் ஸ்டார், இளைய தளபதி என்று இருக்க, நம்ம பையனுக்கும் ஒரு பேர் வச்சு விடுங்க” என்று அந்த திரைப்படத்தின் கதாநாயகனை சுட்டிக்காட்டி கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள், சமூக வலைத்தளங்ளில் ராஜு முருகனை கண்டித்து பல பதிவுகளை பகிர்ந்து வந்தனர். இதனையடுத்து இயக்குனர் ராஜு முருகன், தனது டிவிட்டர் பக்கத்தில், எந்த உள்நோக்கமும் இல்லாமல் தான் அவ்வாறு பேசியதாகவும், விஜய் மற்றும் ரஜினி ஆகியோர் உழைப்பால். அர்ப்பணிப்பால் முன்னேரியவர்கள் என்றும் பதிவு செய்துள்ளார்.