ரஜினி 2.0 டீசர் லீக் : சவுந்தர்யா ரஜினி கண்டனம்

 

ரஜினி ‘2.0’ டீசர் லீக்: சௌந்தர்யா ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக 2.0 திரைப்படம் தயாராகியுள்ளது. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் டீசர் இணைய தளங்களில் லீக் ஆனது.
முன்னதாக, சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட காலா திரைப்படத்தின் டீசரும் இதே போல, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக இணையத்தில் வெளியானது. இப்படி தொடர்ந்து படங்களின் டீசர் மற்றும் டிரைலர்கள் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக இணையத்தில் லீக் ஆவது திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

டீசர் லீக்கானதற்கு நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா வருத்தம் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ‘2.0 படத்தின் டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது. படக்குழுவினரின் கடின உழைப்பு, முயற்சி ஆகியவை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது மனிதாபிமானமற்ற செயல் என்று பதிவு செய்துள்ளார்