ரன்வீர் சிங் நடிப்பில் ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார் ” திவ்யாங் தக்கர் இயக்க யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது

அறிமுக எழுத்தாளர் -இயக்குனரான திவ்யாங் தக்கர் இயக்கத்தில் ஒரு வியக்கத்தக்க பொழுதுபோக்கான கதையில் நடிகர் ரன்வீர் சிங் ஒரு குஜராத் வாசியின்கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .பிரமாண்ட மற்றும் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான  யஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் மணீஷ் சர்மா தயாரிக்கும் இந்த படம் அக்டோபர் மாதம் துவங்கி  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது .

ரன்வீர் சிங் தனது கடின உழைப்பால் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக முத்திரை பதித்துள்ளார் .இவர் சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி முதல் ஜோயா அக்தர் ,கபீர் கான், கரன் ஜோஹர் போன்ற சிறந்த இயக்குனர்கள் பலருடன் தொடர்ந்து நடித்துவருகிறார். தற்போது ரன்வீர் சிங் திரைப்பட வியாபார பட்டியலில் உள்ள நடிகர்களில் அதிகபேருக்கு பிடித்த நடிகராக விளங்குகிறார் .

    
ரன்வீர்சிங் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறமைசாலி என நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் வரலாற்று படமான பத்மாவத்படத்தில் அலாவுதீன் கில்ஜிஎனும் கதாபாத்திரம் , கல்லி பாய் போன்ற படங்கள்  உதாரணமாக கூறலாம் .மேலும் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் அனைத்துமே மக்களால் மிகப்பெரிய வரவேற்ப்பையும் ,வெற்றியும் பெற்றுவருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது .எனவே தரமான படங்களை தேர்ந்தெடுக்கும் நடிக்கும் ரன்வீர்சிங் அறிமுக இயக்குனரான திவ்யாங் தக்கர் கதையில் நடிக்கிறார். இதிலிருந்து இயக்குனர்  திவ்யாங் தக்கர் திறமை எப்படி இருக்கும் என நம்மால் யூகிக்கமுடியும் . 

ரன்வீர் சிங் கூறியதாவது : 

“சிறந்த இயக்குனர்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன் .சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் என்றால் அது அவர்கள் என்மேல் வைத்துள்ள நம்பிக்கையும் அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது  தான் காரணம்  .திவ்யாங் போன்ற ஒரு அற்புதமான புதிய எழுத்தாளர்-இயக்குனரின்  தனிச்சிறப்பு வாய்ந்த கதையையும்,அவரின்  திறமையையும் முழு மனதுடனும் உணர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நிலையில் நான் இன்று என்னைப் பார்க்கிறேன் என்று மகிழ்ச்சியடைகிறேன்.

நான் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் 83 எனும் படத்தின் ரிலீஸிற்கு  பிறகு  திவ்யாங்  இயக்கத்தில் நான் நடிக்க இருக்கும் இந்த “ஜெயேஷ்பாய் ஜோர்தார் ” திரைப்படம் வெளியாகும் . இந்த திரைப்படம் ஒரு நல்ல கதையும்  ,கருத்தும்  கொண்ட படமாகும் .சினிமா பிரியர்களுக்கும் , என் ரசிகர்களுக்கும் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும் வகையில் இருக்கும் . ஒரு அமர்க்களமான கதையை எனக்கு யஷ் ராஜ் பிலிம்ஸ் அளித்துள்ளது .திவ்யாங் தக்கரின் கதையும் ,எழுத்தும் என்னை இப்படத்தில் நடிக்க தூண்டியதற்கு  முக்கிய காரணம் ” என்றார் ரன்வீர் சிங்.


தயாரிப்பாளர் மணீஷ் சர்மா கூறியதாவது  : 

“ஒரு தயாரிப்பாளராகவும் , இயக்குனராகவும் படத்திற்கு  முக்கியமானது என நான் கருதுவது  ஒரு திரைப்படத்தின் கதையும் , ரசிகர்களை  திருப்த்திப்படுத்தும் பொழுபோக்கு அம்சமும் தான் . இதற்கு சிறந்த உதாரணம்  திவ்யாங் தக்கர் அவர்களுடைய கதை . நான் தயாரிக்க ரன்வீர் நடிக்கவிருப்பது  இப்படத்தின்மேல் எனக்கு மேலும் அதிக ஆர்வத்தை தூண்டுகிறது .கிட்டத்தட்ட  10 வருடங்களுக்கு முன்பு எங்களின் சினிமா பயணத்தை தொடங்கினோம் . தற்போது புதுமுக இயக்குனர் திவ்யாங் தக்கர் அவர்களுக்காக மீண்டும் இணைத்து ஒரு அருமையான படத்தை மக்களுக்கு கொடுக்க இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் ” என்றார் தயாரிப்பாளர் மணீஷ் சர்மா.