ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல இயக்குனர் மீது புகாா்.
ரஜினிகாந்த் நடித்த காலா, கபாலி படங்களை இயக்கிய பா.ரஞ்சித், தலித் அரசியல் பேசுபவர், அதுதொடர்பான இயக்கங்களுடன் நெருக்கமான தொடர்புடையவர். நீலம் என்ற அமைப்பை அவரே நடத்தியும் வருகிறார். இந்த நிலையில் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் தலித் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஞ்சித், மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசியிருப்பதாவது: ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலம் பொற்காலம் என்கிறார்கள். அது தவறு, இருண்ட காலம். தமிழ்நாட்டில் ஜாதிக் கொடுமைகள் அதிகம் இருந்தது தஞ்சை டெல்டா பகுதியில் தான். ராஜ ராஜன் ஆட்சிக் காலத்தில் தான் மிகப்பெரிய சூழ்ச்சி நடத்தப்பட்டு, தலித்துகளின் விளைநிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக் காலத்தில் தான் ஜாதி ஒடுக்கு முறைகள் தொடங்கியது. 400 பெண்களை விலைமாதர்களாக மாற்றி மங்களவிலாஸ் நடத்தியது ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்தான் என்று பேசினார்.
இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து தஞ்சை மாவட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி பாலா, மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.