ராஜீவ்காந்தியை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடி.

ராஜீவ்காந்தியை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய பிரதமர்  நரேந்திரமோடி காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பிரதமராக பல சாதனைகள் புரிந்து இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலை நிறுத்தியவர் ராஜீவ்காந்தி. இத்தகைய வரலாற்று சாதனைகள் புரிந்த ராஜீவ்காந்தியை கொச்சைப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திரமோடி பேசியிருப்பது நாகரீகமற்ற செயலாகும். மறைந்த தலைவரை 28 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி இழிவாக பேசியிருப்பது எத்தகைய அநாகரீகம் என்பதை கொஞ்சம் கூட கருதாமல் நாட்டின் பிரதமரே இவ்வாறு பேசியிருப்பது எவ்வளவு தரம் தாழ்ந்த செயல் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை” என்று கூறியுள்ளார். மேலும், “பாராளுமன்ற தேர்தல் முடிந்து வருகிற 23ம் தேதி தேர்தல் முடிவு வெளிவரும்போது மீண்டும் பிரதமராக வர முடியாது என்கிற நிலையை அறிந்த மோடி சமீபகாலமாக பதற்றத்துடன் பேசி வருகிறார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.