ரா.பார்த்திபன் இயக்கும் படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா

மக்களவை மற்றும் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. 

இந்த தேர்தலில் பல சினிமா நட்சத்திரங்களும் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து நடிகர் ரா.பார்த்திபன் இந்த தேர்தலில் தான் ஆதரிக்கும் சின்னத்தை விரைவில் அறிவிக்கிறேன் என ட்விட்டரில் கூறினார். இந்நிலையில் எதோ கட்சிக்கு இவர் ஆதரவு தெரிவிக்க போகிறார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், இவர் “ஒத்த செருப்பு Size 7, இந்த தேர்தல் பரபரப்பை பயன்படுத்திக்கிற யுத்தி , நான் ஆதரிக்கப் போகப்போறது அல்ல, நான் ஆதரவை தேடும் சின்னம். விரைவில் இப்படத்தின் ஒத்த சிறப்பு,மத்த சிறப்பு& ஒட்டு மொத்த சிறப்பு-யாவும் வெளியிடுவேன்” என்று பதிவிட்டுள்ளார். அதாவது ‘ஒத்தசெருப்பு சைஸ் 7’ என்ற படத்தை விரைவில் இயக்கவுள்ளார்.