Friday, June 18
Shadow

ரூபாய் 300 கோடி பிரபல தயாரிப்பாளர் மோசடி காவல் நிலையத்தில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு.

நடிகர் சூர்யா நடிகர் கார்த்தி நடித்த பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவர் மீது மோசடி புகார் எழுந்துள்ளது.

அதன் விவரம் வருமாறு…

நிதி நிறுவனம் ஆரம்பிப்பதாக கூறி துளசி மணிகண்டன் என்பவரை ரூபாய் 300 கோடி மோசடி செய்ததாக நீதிமனி மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது இராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த ரூபாய் 300 கோடி பண மோசடியில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து ஜூலை மாதம் 24-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கம் முடியும் வரை விசாரணைக்கு நேரில் ஆஜராகி விலக்களிக்க வேண்டும் அல்லது வீடியோ கான்ப்ரென்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும்.

என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த மோசடியில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் முதல் தகவல் அறிக்கையில் கூட தன்னுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை எனவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ரூபாய் 3 கோடி மோசடியை காவல்துறையினர் ரூபாய் 300 கோடி என தவறாக குறிப்பிடுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் நேரில் விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த மோசடி வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் வாதிடப்பட்டது.

இதனை அடுத்து, ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி இராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டனர்.

ஆஜராக தவறினால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது காவல்துறையினர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

CLOSE
CLOSE