Thursday, January 28
Shadow

ரூ. 44 கோடியில் ஜெயலலிதா நினைவிடம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, டிசம்பர் 6-ந்தேதி அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு ரூ.43.63 கோடி செலவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.
ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கடந்த ஜனவரி 12-ந்தேதி பொதுப்பணித்துறை டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அதிகாரி தலைமையில் நடந்த ஒப்பந்தப்புள்ளி ஒப்பளிப்பு குழு கூட்டத்தில் குறைந்த தொகை குறிப்பிட்டு இருந்த கிருஷ்ணமூர்த்தி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்துக்கு பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.கண்காணிப்பு பொறியாளர் மேற்பார்வையில் பணி தொடங்கும். இந்த பணியை 12 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

CLOSE
CLOSE