ரெஜினா கசான்றா நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு த்ரில்லர் “ எவரு “ ! 

பிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் பேர்ல் வி பொட்லூரி , பரம் வி பொட்லூரி , கவின்அன்னே தயாரிக்கும் திரைப்படம் “ எவரு “. சீட் எட்ஜ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில்  நடிகை ரெஜினா கசான்ரா , “ சனம் “ புகழ் ஆத்வி ஷேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த புகழ் பெற்ற நடிகரான முரளி சர்மா நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான வெங்கட் ராம்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். 

       கொடைக்கானல் , ஹைதரபாத் 
உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. எவரு வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி உலகமுழுவதும் பிரமாண்டமாக  வெளியாகியுள்ளது