ரெபல் ஸ்டார்’ பிரபாஸ்- இயக்குநர் ஹனு ராகவபுடி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படத்தில் இணைந்த பாலிவுட் ஜாம்பவான் அனுபம் கேர்!
ரெபல் ஸ்டார்’ பிரபாஸ்- இயக்குநர் ஹனு ராகவபுடி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படத்தில் இணைந்த பாலிவுட் ஜாம்பவான் அனுபம் கேர்!சென்னை 16 பிப்ரவரி 2025 ப்ளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களான சலார் மற்றும் கல்கி 2898 கிபி ஆகிய படங்களின் மூலம் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் ‘ரெபல் ஸ்டார் ‘ பிரபாஸ் தற்போது படைப்பாற்றல் மிக்க இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கும் பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் பாலிவுட் ஜாம்பவான் அனுபம் கேர் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை நடிகரே பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்..
‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ்- ஹனு ராகவபுடி – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இது.
1940களில் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த வரலாற்று புனைவு கதை / மாற்று வரலாறு. போர் மட்டும் தான்…உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட மற்றும் புதைக்கப்பட்ட அநீதிகளுக்கும், மறக்கப்பட்ட உண்மைகளுக்கும் ஒரே தீர்வு என்று நம்பிய சமூகத்திலிருந்து… அதன் நிழல்களிலிருந்து… எழுந்த ஒரு போர் வீரனின் கதை.
இப்படத்தில் பிரபாஸுற்கு ஜோடியாக நடிகை இமான்வி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். சுதீப் சட்டர்ஜி ISC ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நடிகர்கள் :
தொழில்நுட்ப குழு :
எழுத்து & இயக்கம் : ஹனு ராகவபுடி
தயாரிப்பு நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
தயாரிப்பாளர்கள் : நவீன் யெர்னேனி – ஒய். ரவிசங்கர்
ஒளிப்பதிவு : சுதீப் சட்டர்ஜி ISC
இசை : விஷால் சந்திரசேகர்
தயாரிப்பு வடிவமைப்பு : அனில் விலாஸ் ஜாதவ்
படத்தொகுப்பு : கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்
பாடலாசிரியர் : கிருஷ்ண காந்த்
ஆடை வடிவமைப்பாளர்கள் : ஷீத்தல் இக்பால் சர்மா – டி . விஜய் பாஸ்கர்
விளம்பர வடிவமைப்பு : அனில் – பானு
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ











