பட்டைய கிளப்பும் வசனங்கள் க/பெ ரணசிங்கம். இந்த திரைப்படத்தின் மூலம் அரசியல் மாற்றம் வருமா.?

இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் க/பெ ரணசிங்கம்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் டீசரும் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு நிமிடம் 40 நொடிகள் ஓடும் இந்த டீஸரில் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் கிராமத்து மக்களுக்கும் இடையே நடக்கும் தண்ணீர் பிரச்சனையை மைய்ப்படுத்தி எடுத்துள்ளனர்.

தண்ணியையும் காத்தையும் வச்சுதான் அரசியல் செய்றாங்க என்ற வசனத்தோடு இந்த பட டிரைலர் ஆரம்பிக்கிறது.

அரசாங்கமும் அரசு ஊழியர்களும் நினைத்தால் அப்பாவி மக்களை அடிமையாக ஆட்டிப் படைக்கலாம் போன்ற காட்சிகள் உள்ளது.

அதே சமயத்தில் மக்கள் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும் என்பது போலவும் காட்சிகள் உள்ளது.

‘ரேஷன் கார்டுல இருந்து பேரை எடுத்துடுவிடியா.. எடுத்துக்கோ.. நாங்க இந்தியாவிலேயே இல்லைன்னு சொல்லிக்கோ போ’ என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் பேசும் வசனம் தற்போது நடக்கும் நிஜ அரசியலை மையப்படுத்தி உள்ளது.

பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கி உள்ள க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் மூலம் அரசியல்்் மாற்றம் வருமா இந்த திரைப்படத்தில்  நாம் பார்த்த டீசரில் அரசியல் வசனங்கள் அதிகம் உள்ளது.