லதா ரஜினிகாந்த்தை நேரில் ஆஜராக பெங்களூரு போலீஸ் நோட்டீஸ்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கோச்சடையான் கடந்த 2014ம் ஆண்டு வெளியானது. கர்நாடகாவில் பிரபல தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று, இதனை வாங்கி விளம்பரம் செய்தது ஆனால், கோச்சடையான் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை .இதனால், நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் மற்றும் தனியார் விளம்பர நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டதாக தகவல் வெளியானது. இதற்கு நீதிமன்றம் மற்றும் தனியார் விளம்பர நிறுவனத்திற்கு லதா ரஜினிகாந்த், இந்தப் படத்தின் மூலம் தங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால், நஷ்ட ஈடு கொடுக்க முடியாது என்றும் ஓர் கடிதத்தை எழுதினார். ஆனால் இது போலியான கடிதம் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த போலி கடிதம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ஒருமுறை லதா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அல்சூர் கேட் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்
.ஆனால், அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், 2ஆவது முறையாக சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது இதனை ஏற்ற லதா ரஜினிகாந்த் வரும் 20ம் தேதி நேரில் ஆஜராவதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளம்பர மோசடி: லதா ரஜினிக்கு பெங்களூர் கோர்ட் உத்தரவு #LathaRajinikanth #latharajini https://t.co/2eaRq79jVP pic.twitter.com/Qf4HoLP4bE
— Dinamalar Cinema (@dinamalarcinema) May 13, 2019