லாபம் திரை விமர்சனம். ரேட்டிங் –2.75 /5

நடிகர் நடிகைகள் – விஜய் சேதுபதி, சுருதிஹாசன், சாய் தன்ஷிகா, டயானா சம்பிகா,. ஜெகபதி பாபு, மாரி முத்து, ஐ. எஸ் ராஜேஷ், வின்சன்ட் அசோகன், ஓ ஏ கே. சுந்தர், சண்முகராஜன், பிரித்வி பாண்டியராஜன், மாரிமுத்து, அழகன் தமிழ்மணி, ரமேஷ் திலக், கலையரசன், நித்திஷ் வீரா, ரவிவர்மன், தமிழ், டேனி மற்றும் பலர்.

தயாரிப்பு – 7Cs என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட். விஜய் சேதுபதி புரெடக்ஷன்ஸ்,

இயக்கம் – எஸ்.பி.ஜனநாதன்

ஒளிப்பதிவு – ராம்ஜி,

படத்தொகுப்பு – 
என்.கணேஷ்குமார் & எஸ்.பி.அகமது

இசை – டி இமான்

மக்கள் தொடர்பு – யுவராஜ்

திரைப்படம் வெளியான தேதி – 09 செப்டம்பர் 2021

ரேட்டிங் –2.75 /5

மக்கள் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கிய முதல் திரைப்படம் 2003 ஆம் வருடம் இயற்கை திரைப்படத்திற்கு வெற்றியாளர், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது.

ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, என சமூக கருத்துக்களை மக்களுக்கு பிடித்தவாறு படங்களாக கொடுத்து வந்தவர் மக்கள் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்.

பூலோகம் திரைப்படத்திற்கு எழுத்தாளர் வசனம் எழுதியிருக்கிறார்.

மக்கள் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் அவர்கள் தமிழ் திரைப்பட உலகின் மண்ணைவிட்டு பிரிந்திருந்தாலும், என்றுமே நமது மனதை விட்டு பிரியாத அளவிற்கு சிறந்த படைப்புகளை நமக்கு கொடுத்துள்ளார் மக்கள் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இவருடைய நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் லாபம்.

இந்த திரைப்படத்தினை மறைந்த மக்கள் இயக்குநர் எஸ் பி ஜனநாதன் இயக்கியுள்ளார்.

மக்கள் இயக்குநர் எஸ் பி ஜனநாதன் இவர் இயக்கிய கடைசி திரைப்படம்.

மக்கள் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்
அவர்களுடைய இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம்தான் லாபம்.

இந்தத் திரைப்படம் ஆரம்பத்திலிருந்து
பல போராட்டம் மற்றும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ள இந்த லாபம் திரைப்படம்.

விவசாயம் பொய்த்துப் போனதாக மக்கள் ஊரை விட்டே கிளம்பிக் கொண்டிருக்க பக்கிரிசாமியைக் கண்டதும் தங்கள் துயரம் தீர்க்க வந்த பெருமகன் என்று கொண்டாடுகிறார்கள்.

ஏழு வருடத்திற்கு முனபு தனது பெருவயல் கிராமத்தை விட்டு வெளியேற்றப்படும் கதாநாயகன் விஜய் சேதுபதி ( பக்கிரிசாமி ) ஏழு வருடங்கள் கழித்து பல நாடுகள் பல ஊர்கள் காடு கரையெல்லாம் சுற்றி, திரிந்து பல விஷயங்களை தெரிந்துகொண்டு மீண்டும் தனது சொந்த பெருவயல் கிராமத்துக்கு திரும்புகிறார் கதாநாயகன் விஜய் சேதுபதி ( பக்கிரிசாமி ).

தனது சொந்த பெருவயல் கிராமத்தை விவசாயத்தின் மூலம் தனது ஊரை செழிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஊருக்கு வரும் கதாநாயகன் விஜய் சேதுபதி ( பக்கிரிசாமி ) தனது நண்பர்களுடன் சேர்ந்து, விவசாயிகளை காப்பாற்ற, நல்ல விஷயங்களை செய்ய முயற்சி எடுக்கிறார்.

அதற்காக தனது ஊர் மக்களின் நம்பிக்கையை கதாநாயகன் விஜய் சேதுபதி ( பக்கிரிசாமி ) பல வழிகளில் போராடுகிறார்.

ஆனால், மற்றொரு புறம் மக்களிடம் இருந்து அவர்களுடைய நிலத்தையும் உழைப்பையும் சுரண்டி எடுக்கும் வில்லனாக உள்ள ஜெகபதி பாபு. கொடுக்கிறார்.

தன்னை நல்லவனாகவும் மக்களுக்கு நல்லது செய்வது போலவும் தன்னை காட்டுக்கொள்ளும் ஜெகபதி பாபு, மக்களுக்கு எதிரான பல விஷயங்களை மக்களுக்கே தெரியாமல் செய்து வருகிறார்.

கிராமத்து நிலங்களை வளைத்துப் போட்டு பயோ டீசல் தொழிற்சாலையை நிறுவ நினைக்கும் வில்லனாக வரும் ஜெகபதி பாபு விவசாயத்தாலேயே மாற்றம் ஏற்படும் என்று நிரூபிக்கப் போராடுகிறார் கதாநாயகன் விஜய் சேதுபதி ( பக்கிரிசாமி )

இதுவரை அமைதியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த வில்லன் ஜெகபதி பாபு, ஒரே அடியில் மக்கள் நம்பிக்கை வைத்து இருந்த விஜய் சேதுபதி ( பக்கிரிசாமியின் செல்வாக்கை வில்லன் ஜெகபதி பாபு மக்கள் மனதை கலைத்து விடுகிறார்.

இதன் பின்பு, எப்படி அதிலிருந்து கதாநாயகன் விஜய் சேதுபதி ( பக்கிரிசாமி ) மீண்டு வந்தார்..? மீண்டும் மக்களிடம் நம்பிக்கையை சம்பாதித்தாரா..? இல்லையா..? விவசாயம், விவசாயியின் நிலை என்னாவது..? என்பதே லாபம் திரைப்படத்தின் மீதி கதை.

பல விதமான தடைகளுக்குப் பிறகு விவசாயத்தால் ஊரையும், ஊர் மக்களையும் செழிப்பாக்க முடியும் என்று விளக்கம் அளிக்கிறார் கதாநாயகன் விஜய் சேதுபதி ( பக்கிரிசாமி ) . அதைச் செயல்படுத்துவதற்காக விவசாய சங்கத் தலைவராகவும் ஆகிறார்.

நண்பர்கள் படை சூழ கூட்டுப் பண்ணை விவசாய முறையை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

இடையில் சர்க்கரை ஆலை, பருத்தி ஆலைக்கு விவசாயிகளை அழைத்துச் சென்று விளைபொருள் என்னவாக மாறுகிறது,

அதிலிருந்து என்னென்ன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்று நேரடியாக விளக்குகிறார்.

கூட்டுப் பண்ணை விவசாய முறைக்கு கிராம மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள்.

இதை விரும்பாத தொழிலதிபர் வணங்காமுடி வில்லன் (ஜெகபதி பாபு) ஊரில் இருக்கும் சர்க்கரை ஆலை, பருத்தி ஆலை அதிபர்களுடன் இணைந்து சதி செய்கிறார்.

கதாநாயகன் விஜய் சேதுபதி ( பக்கிரிசாமியை ) மக்கள் வெறுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அவரைத் தவறாகச் சித்தரிக்கிறார்.

இந்நிலையில் கதாநாயகன் விஜய் சேதுபதி ( பக்கிரிசாமி ) மீது திருட்டுப் பட்டம் விழுகிறது.

ஊர் மக்களே அவரை அடித்துத் துன்புறுத்துகின்றனர்.

ஒரு வழியாக, நாடக கலைஞர்கள் மூலம் சொன்னால் மக்களுக்கு எளிதான வழியில் புரியும் என்று நாடக கலைஞர்களை வரவைக்கிறார்.

அதில் நடன கலைஞராக, கிளாரா எனும் கதாபாத்திரத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

ஸ்ருதி ஹாசன் படத்தின் மையத்தில் வருகிறார்.

பாட்டு, காதல், கொஞ்சம் வசனம் என வந்து விவசாயிகளை ஒன்று திரட்டி பிறகு காரண காரியமில்லாமல் காணாமல் போகிறார்.

முயற்சியின் மேல் முயற்சியாக செய்து மக்களின் நம்பிக்கையை பெரும் கதாநாயகன் விஜய் சேதுபதி ( பக்கிரிசாமி ) மக்களின் தரிச நிலங்களில், கடுமையான உழைப்பினால் விவசாயம் செய்து, விவசாய நிலமாக மாற்றுகிறார்.

கிராம மக்களுக்கா கஷ்டப்பட்டாரோ அவர்களே தன்னை நம்பவில்லை என்ற சூழலில் கதாநாயகன் விஜய் சேதுபதி ( பக்கிரிசாமி ) என்ன செய்கிறார்.

நான்கு தொழிலதிபர்கள் ஊர் மக்களை ஏமாற்றுவதற்கான உண்மையான காரணம் என்ன, ஊர் மக்கள் பக்கிரிசாமியை பிறகு நம்பினார்களா, பெருவயல் கிராமத்து விளை நிலங்கள் என்னாயின, பயோ டீசல் தொழிற்சாலையை நிறுவ முடிந்ததா போன்ற கேள்விகளுக்கு சற்றே பெரிய அளவில் விளக்கம் சொல்கிறது திரைக்கதை.

கதாநாயகன் விஜய் சேதுபதி ( பக்கிரிசாமியின் ) நண்பர்களாக நடித்திருந்த கலையரசன், டானியல், நிதிஷ் வீரா, ரமேஷ் திலக், ப்ரித்வி பாண்டியராஜன் ஆகியவர்களின் நடிப்பு சிறப்பு.

ஜெகபதி பாபு ஒப்புக்கு எதிர்நாயகனாக நடித்துள்ளார்.

அவரின் வில்லத்தனம் சரியாக வெளிப்படவில்லை. சாய் தன்ஷிகா காட்சிப் பொருளாக மட்டும் வந்து செல்கிறார்.

இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனின் இயக்கம் பாராட்டுக்குரியது.

ஆனால் திரைக்கதை கொஞ்சம் போர் தான்.

சிறந்த கருத்துக்கள் இருந்தாலும், திரைக்கதை படத்தை கொஞ்சம் சொதப்பிவிட்டது.

டி இமானின் இசையும், பின்னணியும் தொழில்நுட்ப அளவில் படத்துக்கு வலு சேர்க்கின்றன.

ராம்ஜியின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு கூடுதல் பலம். கணேஷ் குமார் மற்றும் எஸ்.பி. அஹ்மத்தின் எடிட்டிங் சுமார்.

திரைப்படத்தின் முதல் காட்சியில் ஒரு லாரியில் இருந்து இறங்கும் கதாநாயகன் விஜய் சேதுபதியிடம் டிரைவர் ‘முடிஞ்சா மறுபடியும் பார்க்கலாம்’ என்று சொல்ல ‘முடியும் கண்டிப்பா பார்க்கலாம்’ என்பார் விஜய் சேதுபதி.

முதலாளித்துவத்தை எதிர்க்கும் நல்ல கதையை ஜனநாதன் எழுதியுள்ளார்.

மக்கள் இயக்குனர் ஜனநாதனின் நல்ல சிந்தனைக்காக இந்த லாபம்படத்தை கண்டிப்பாகப் பார்க்கலாம்.