வதந்தி பரப்புபவர்கள் அந்த காதலன் யார் என்பது குறித்து எனக்கும் சொல்லுங்கள். ஐஸ்வர்யா ராஜேஷ்

என் காதலன் யார் என சொல்லுங்கள் ஐஸ்வர்யா ராஜேஷ்

‘கனா’ வெற்றிக்கு பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் காதலில் விழுந்துவிட்டதாகவும் விரைவில் அவருக்கு திருமணம் என்றும் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் உலா வந்தது. இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்டுள்ள டீவீட்டில் “எனது காதல் கதை குறித்த வதந்திகளைக் கேட்டு கொண்டிருக்கிறேன். வதந்தி பரப்புபவர்கள் அந்த காதலன் யார் என்பது குறித்து எனக்கும் சொல்லுங்கள். அவர் யார் எனத் தெரிந்துகொள்ள நானும் ஆவலுடன் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.