வயதான தோற்றத்தில் நடிக்கும் டாப்ஸி – ரசிகர்கள் வரவேற்பு

தமிழில் ‘ஆடுகளம்’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்ததவர் நடிகை டாப்ஸி. இவர் பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும் ‘சாந்த் கி ஆங்க்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தில் நடிகை டாப்ஸி நடிக்கும் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்த படத்தில் நடிகை டாப்ஸி அறுபது வயது பெண் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தோற்றம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் துப்பாக்கி சுடும் வீராங்கனைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்திற்காக டாப்ஸி துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளார்.