வயநாடு பழங்குடி மக்களின் கலாசாரத்தை உணர்கிறேன்-பிரியங்கா காந்தி பிரச்சாரம்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார் இந்த கூட்டத்தில், பிரியங்கா காந்தியையும் அவரது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திராகாந்தியையும் ஒப்பிட்டு சிலர் பேசினர் இதையடுத்து, கூட்டத்தினர் மத்தியில் பேசிய பிரியங்கா காந்தி, “இந்திரா காந்தியுடன் ஒப்பிட்டால் நான் ஒன்றுமேயில்லை. ஆனால் தேசத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற இந்திரா காந்தியின் நோக்கமே, எனது இதயத்திலும், எனது சகோதரர் ராகுல்காந்தி இதயத்திலும் இருக்கிறார். இந்த நோக்கத்தை எங்களிடம் இருந்து யாரும்

அகற்றிவிட முடியாது”என்று கூறினார். மேலும், “பழங்குடி மக்களின் கலாசாரம், வயநாடு மக்களின் கலாசாரத்தை உணர்கிறேன். தமிழகம், உதிர்ப்பிரேதேசம், குஜராத் அனைத்தும் எனது நாடே” என்றும் பரப்புரை செய்தார்.