வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் – நடிகர் சூர்யா

12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து திரைத்துறையினர் பலரும் இன்று காலை முதல் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா, நடிகர் கார்த்தி அவரது மனைவி ரஞ்சினி ஆகியோர் தியாகராய நகரில் உள்ள பள்ளி ஒன்றில் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா பதிவு செய்து இருக்கும் ட்வீட்டில் “உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.