வாக்கு அளித்த விவகாரம் – நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்.

கடந்த மாதம் 18ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. அப்போது சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்கு அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கூறுகையில் “வாக்குச்சாவடியில் எனது அடையாள அட்டையை காண்பித்தேன். வாக்குச்சாவடி அதிகாரிகள் பட்டியலில் பெயர் இல்லை என்றார்கள். ஆனாலும் வாக்களிக்க அனுமதித்தார்கள். அதன்பேரில் வாக்களித்துவிட்டு திரும்பினேன். இதில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது எனது தவறல்ல. அது என் பிரச்னையும் அல்ல. எந்த அதிகாரியும் என்னிடம் விசாரணை நடத்தப் போவதாக கூறவும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.