வாட்ச்மேன் – திரை விமர்சனம்

சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் ஜி.வி பிரகாஷ்.
வாட்டர் கேன் பிசினஸ் செய்து வர பிசினஸ் நஷ்டம் அடைந்து விடுகிறார் பணம் கொடுத்த கந்துவட்டிக்காரன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு அடிக்கடி போன் தொந்தரவு செய்கிறான்
பணம் தரவில்லை என்றால் உனக்கு நடக்க இருக்கும் நிச்சயதார்த்தத்தை எனது ஆட்களை வைத்து நிறுத்தி விடுவேன்.
என மிரட்ட பண பிரச்சனையில் சிக்கி பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்.
ஜி.வி.பிரகாஷ்
அதே சமயம் தன்னுடைய காதலியான சம்யுக்தாவையும் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறார். இதனால் மனமுடைந்து போன
ஜி. வி.பிரகாஷ் ஒரு பங்களாவுக்குள் திருட செல்கிறார்.

யாருமே இல்லாத பங்களாவில் உள்ள நாயிடம் சிக்கி கொள்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் அதன் பின்னர் என்ன நடக்கிறது?
நாயிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்? அந்த பங்களாவுக்குள் அப்படி என்ன தான் நடந்தது? தன்னுடைய காதலியை கரம் பிடித்தாரா? இல்லையா என்பது தான் இப்படத்தின் மீதி கதை .

ஜி. வி பிரகாஷ் இந்த படத்தின் மூலமாக தன்னால் எப்படியான கதைகளிலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை இந்த வாட்ச்மேன் படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

ஹீரோயிசம் உள்ள படங்களில் பொதுவாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்காது. இது தான் தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடந்து வருவது. இந்த படத்திலும் அதே தான் நடந்துள்ளது. சம்யுக்தாவிற்கு பெரிய அளவில் முக்கியதத்துவம் இல்லை. ஏன் டூயட் பாடல் கூட இல்லை.

சுமன் அவருக்கு கொடுத்த கேரக்டரை மிகவும் அற்புதமாக நடித்துள்ளார்
யோகி பாபுவின் எதார்த்தமான நடிப்பு, நேரத்திற்கு ஏற்றார் போல அவர் கொடுக்கும் கமெண்ட்கள் பிரமாதம். ரசிகர்களை சிரிக்க வைப்பது மிக மிக ?

இந்த படத்திற்கும் ஜி.வி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். திரில்லர் படத்திற்கு ஏற்றார் போல பின்னணி இசையில் மிகவும் அருமை .

நீரவ் ஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவருடைய பணியை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த படத்திலும் அப்படி தான் மிக சிறப்பான ஒளிப்பதிவு மற்றும் லைட்டிங் மிக அருமையாக படத்தை காண்பித்துள்ளார்.

அந்தோணி இப்படத்திற்கு எடிட்டிங் பணிகளை கதைக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளார். நல்ல முறையில் தன்னுடைய எடிட்டிங் பணியை முடித்து கொடுத்துள்ளார்.

இயக்குனர் ஏ.எல் விஜய் இப்படத்தை முற்றிலும் மாறுப்பட்ட கதையை திரைக்கதையுடன் குழந்தைகளுக்கு மிகவும் ரசிக்கும் வகையில் இந்த படத்தை கொண்டு சென்றுள்ளார். இந்த படத்திற்கு பிறகு ஜி.வி பிரகாஷிற்கு குழந்தைகள் ரசிகர்களும் அதிகமாகி விடுவார்கள். என்பது உறுதியாகியுள்ளது.

காதல் காட்சிகள், பாடல்கள் இல்லாதது தான் குறை.
ஆனால் பாடல் ஒன்று உள்ளது படம் முடிந்த பிறகு ரோலிங் டைட்டிலில் அந்த பாடலை உபயோகப்படுத்துகிறார்கள்
அந்தப்பாடலை நடுவில் எங்கேயாவது சேர்த்து இருந்தால் கதை கெட்டுவிடும் என்பதால் ரோலிங் டைட்டில் பயன்படுத்தி உள்ளார் இயக்குனர் ஏ எல் விஜய்

மொத்தத்தில் வாட்ச் மேன் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாய் சேர்ந்து ரசிக்க வேண்டிய படம்.

டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ. எல் விஜய் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ், யோகி பாபு, சம்யுக்தா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்