வாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்!

ஐபோன்களுக்கான வாட்ஸ்அப் மெசேஞ்சர் செயலியில் கூட்டு அழைப்புக்களை (group calling) மிக எளிமையாக மேற்கொள்ளும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஐ.ஓ.எஸ். பீட்டா செயலியின் அங்கமாக இந்த புதிய அம்சம் காணப்படுகின்றது. கூட்டு அழைப்புக்களை நேரடியாக புதிய அழைப்பு திரையில் (New Call screen) இருந்து மேற்கொள்ளும் வசதியும் வழங்கியுள்ளது.

புதிய அப்டேட் வாட்ஸ்அப் செயலியில் குரல் செய்திகளை தொடர்ச்சியாக பிளே செய்யும் வசதி வழங்குகின்றது. குறித்த வசதிகளை பயன்படுத்த ஐபோனில் ஐ.ஓ.எஸ். 8.0 அல்லது அதற்கும் அதிக பதிப்புகளை பயன்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் செயலியில் கூட்டு அழைப்புக்கள் வசதி சாட் விண்டோவை திறக்கும் போது காணப்படுகின்றது.

இந்த புதிய மாற்றம் மூலம் கூட்டு குரல் அல்லது வீடியோ அழைப்புக்களை மிக எளிமையாக மேற்கொள்ள முடியும். அழைப்பு மேற்கொள்ள வேண்டியவர்களை வாட்ஸ்அப் மூலம் தேர்வுசெய்ய வேண்டும். குரல் அழைப்பு அல்லது வீடியோ அழைப்பு மேற்கொள்ள வேண்டுமா என்ற தெரிவு வழங்கப்படுகிறது. அதில் நீங்கள் விரும்பும் ஏதாவது தெரிவை தேர்வுசெய்ய முடியும்.

வாட்ஸ்அப் கூட்டு அழைப்புக்கள் செய்ய அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நீங்கள் ஆரம்பிக்கும் கூட்டு அழைப்புக்களில் மூன்று புது நபர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ள முடியும்.