வால்டர் திரை விமர்சனம். ரேட்டிங் – 2./5

நடிப்பு – சிபி சத்யராஜ், ( நட்டி ) நடராஜன் சுப்பிரமணியம், ஷிரின் காஞ்ச்வாலா, பவா செல்லத்துரை, அபிஷேக், ரித்விகா, சனம் ஷெட்டி, யாமினி சந்தர், மற்றும் பலர்

தயாரிப்பு – 11:11 புரொடக்சன் பி லிமிடெட்

இயக்கம் – யூ.அன்பு

ஒளிப்பதிவு – இராமசாமி

எடிட்டிங் – இளையராஜா எஸ்

இசை – தர்மபிரகாஷ்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா ரேகா.D one

திரைப்படம் வெளியான தேதி – 13 மார்ச் 2020

ரேட்டிங் – 2./5

 

தமிழ் திரைப்பட உலகில் எத்தனையோ காவல்துறை சம்பந்தமாக எவ்வளவு திரைப்படங்கள் வந்து இருக்கிறது அதில் சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல் 1993 வருடம் வெளி வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்

அந்தப் படத்திலிருந்து வால்டரை மட்டும் எடுத்து சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் நடித்த வால்டர் திரைப்படம் வால்டர் என்ற பெயருக்கான மரியாதை இந்த திரைப்படத்தில் இல்லை.

மெடிக்கல் கிரைம் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் U.அன்பு.

கும்பகோணத்தில் உயர் காவல் துறை அதிகாரியாக இருக்கிறார் கதாநாயகன் சிபி சத்யராஜ். இதற்கிடையில்
கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்
பிறந்த கைகுழந்தைகள் தீடீரென காணாமல் போகிறது உடனே கைகுழந்தைகள் தானாகவே கிடைக்கிறது கிடைத்த மறுநாள் உடனே கைகுழந்தைகள் இறந்து விடுகின்றன.

கதாநாயகன் சிபிசத்யராஜ் தலைமையாளன டீம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

கண்டுபிடிக்கபட்ட கைகுழந்தைகள் வீட்டிற்கு சென்றதும் இழந்துவிடுகிறது. கைகுழந்தைகள் தொலைவதும், கிடைப்பதும், இறப்பதும் என தொடர்ந்து அடிக்கடி நடந்துகொண்டு இருக்கிறது.

கைகுழந்தைகள் கடத்தப்படுவதும் அதன் பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகக் கருதி விசாரணையில் இறங்குகிறார். கதாநாயகன் சிபிசத்யராஜ்

கும்பகோணம்
தொகுதியில் சர்வ வல்லமை படைத்த எம்.எல்.ஏ ஆக இருப்பவர் பவா செல்லத்துரை. தன்னுடன்
அரசியல்வாதியாக வளர்ந்த சமுத்திரக்கனி தனக்குப் போட்டியாக வளர்ந்ததைக் கண்டு மனதளவில் கோபம் கொண்டு சமுத்திரக்கனியை என்கவுண்டரில் போடச் சொல்கிறார். எஸ்பி

எஸ்பியும் எம்எல்ஏ அவர்களின் உத்தரவுப்படி சமுத்திரகனியை கதாநாயகன் சிபிசத்யராஜ் தலைமையிலான டீம் என்கவுண்டர் செய்கிறது.

இதற்கிடையில் சமுத்திரகனி என்கவுண்டர் செய்யப்பட்ட அதே பாலத்தில் கதாநாயகன் சிபிசத்யராஜ்யும் அவரது காதலி கதாநாயகி ஷிரின் கான்ச்வாலாவையும் மீது விபத்தை ஏற்படுத்துகிறார் நட்டி நட்ராஜ்

தனது மீது விபத்தை ஏற்படுத்தியது யார் என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் கதாநாயகன் சிபிசத்யராஜ். நட்டி நட்ராஜ் யார் ? கைகுழந்தைகளை கடத்தியது யார் ? என்பதை கதாநாயகன் சிபிசத்யராஜ் கண்டுபிடித்தாரா ? இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.

முந்தைய திரைப்படங்களை விட அழகாகவும் துடிப்புடனும் கம்பீரமாகவும் இருக்கிறார் கதாநாயகன் சிபிசத்யராஜ். காவல்துறை அதிகாரி கதாபாத்திரமாம் உடையும் கம்பீரமும் மிகவும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.  கதாநாயகன் சிபி சத்யராஜ்

கதாநாயகியாக வரும் ஷெரின் காஞ்வாலா அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பாடல் காட்சிகளில் வந்து போகிறார்.

இந்தத் திரைப்படத்திற்கு கதாநாயகி ஷெரின் காஞ்வாலா
தேவையே இல்லை ஏன் கதாநாயகி தேவையில்லாமல் கதைக்குள் கொண்டு வந்தார்கள் என தெரியவில்லை.

நட்டி நட்ராஜ் வில்லனாக மிக அருமையாக நடித்துள்ளார். சிறிது நேரம் வந்தாலும்
அவரது கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார் சமுத்திரக்கனி. ரித்விகா, சனம் ஷெட்டி, அபிஷேக், யாமினி சுந்தர் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சரியாக நடித்திருக்கிறார்கள்

கும்பகோணம் நகரத்தை அவ்வளவு அழகாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் இராசாமதி. அவரது ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்த்துள்ளது. இசையமைப்பாளர் தர்மபிரகாஷின் இசையில் பாடல்கள் & பின்னணி இசை சுமாரான ரகம்.

பார்த்து பழக்கப்பட்ட கதை தான் ஆனால் கதை சொன்ன விதம்தான் சரியில்லை இன்னும் கொஞ்சம் திரைக்கதையை நன்றாக யோசித்திருக்கலாம்.

இந்த திரைப்படத்தின் இறுதி காட்சியில் கிரிமினல் அரசியல்வாதிக்கு கொடுக்கும் தண்டனை மிகவும் புதுமையாக உள்ளது.

வால்டர் – பெயருக்கு ஏற்றது போல் கம்பீரம் இல்லை