விக்னேஷ் சிவன் மீது வழக்கு பதிவு செய்ய – தயாரிப்பாளர் முடிவு

கொலையுதிர் காலம்’ பட விழாவில் நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சையாக பேசினார். இதனையடுத்து நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் ராதாரவிக்கு எதிராக பல கருத்துகளை பதிவிட்டார். மேலும், நிறைவடையாத ஒரு படத்திற்கு எதற்கு விழா நடத்தப்பட்டது என கேள்வியும் எழுப்பியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தை வாங்க முடிவு செய்து இருந்த ஒரு வினியோகஸ்தர் பின் வாங்கி விட்டதாக தெரிகிறது. மேலும், இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ரூ. 2.5 கோடிக்கு வாங்குவதாக இருந்தது. விக்னேஷ் சிவன் கூறிய கருத்தால் அந்நிறுவனமும் தற்போது பின் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் ‘கொலையுதிர் காலம்’ படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர், நஷ்ட ஈடு கேட்டு விக்னேஷ் சிவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.